Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பனை மேம்பாட்டு இயக்கம்…. “100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கல்”…!!!!!

விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுகின்றது.

தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரம் தமிழர்களின் வாழ்வோடு இணைந்துள்ளது. பனைமரம் நிலத்தடி நீரை அதிகரிக்கும், மண்ணரிப்பை தடுக்கும், மண்ணை உறுதி படுத்தும் மேலும் வளப்படுத்தும். மண்ணுக்கு ஏற்ற மரமாக விளங்குகின்றது. பனைமரம் அடி முதல் நுனி வரை பலனளிக்க கூடியது.

பதநீர் இறக்குதல், நுங்கு அறுவடை, பாய் முடைதல், கூடை பின்னுதல் என பனைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதற்கான காரணம் பனை குறித்த விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் குறைந்து வருகின்றது.

இதை கவனத்தில் வைத்து பனை சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக சென்ற வருடம் வேளாண் நிதி நிலை அறிக்கையில் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பனை விதைகள் வழங்கப்பட்டு வருவதாக தோட்டக்கலை உதவி இயக்குனர் கூறியுள்ளார்.

Categories

Tech |