நடிகர் தனுஷ் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகின்றார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்தது. இந்த நிலையில் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பானது தென்காசியில் நடந்து அண்மையில் நிறைவு பெற்றது.
அடுத்த 30 நாட்களுக்கு மேல் தென்காசியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் படத்தின் செட் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றது. இதனால் தனுஷ் சில நாட்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துவிட்டு பிறகு மீண்டும் திரைப்படத்தில் இணைய உள்ளார். தற்போது தனுஷ் குடும்பத்துடன் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தனுஷ் நடிப்பில் அடுத்த வருடம் வாத்தி திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.