சென்ற வாரம் திரையரங்கில் வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே விமர்சனத்தையே பெற்றுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் பிரின்ஸ் படம் தீபாவளியையொட்டி சென்ற அக்டோபர் 21 தேதி வெளியானது.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. படத்தில் சுவாரஸ்யம் இல்லை எனவும் காமெடி காட்சிகளும் வொர்க் அவுட் ஆகவில்லை எனவும் ரசிகர்கள் விமர்சித்தார்கள். இந்த நிலையில் பிரின்ஸ் திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் பல திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. தற்போது படம் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் மட்டுமே ஓடி வருவதாகவும் சொல்லப்படுகின்றது. சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் குறிப்பிடத்தக்கது.