தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற 8-ம் தேதி நடைபெறுகின்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியில் அதிமுகவை சேர்ந்த ஐந்தாவது வார்டு உறுப்பினர் சத்யா தலைவராக இருந்த நிலையில் அவருக்கு எதிராக பஞ்சாயத்து உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இதனால் பஞ்சாயத்து தலைவர் சத்யா பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தலை அறிவித்திருக்கின்றது.
அதன்படி வருகின்ற 30 ஆம் தேதிக்குள் உறுப்பினர்களுக்கு மறைமுக தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பு சார்பு செய்ய வேண்டும். வருகின்ற 8-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக இருக்கும் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற 8-ம் தேதி காலை 10:30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது. அதிமுக கவுன்சிலர்களும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை திமுக கைப்பற்ற இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.