Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் தேவரகொண்டா திருமணம் குறித்து பேசிய ஜான்விகபூர்”…. எந்த அடிப்படையில் அவர் அப்படி கூறியிருப்பார்…?

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா குறித்து ஜான்வி கபூர் பேசியுள்ளார்.

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். இவரும் நடிகை ராஷ்மிகாவும் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தபோது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக காதல் முறிந்து விட்டதாகவும் தற்போது இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றார்களாம். ஆனால் இது நட்பில்லை காதல்தான் என்கின்றார்கள் ரசிகர்கள்.

இந்த நிலையில் அண்மையில் நடிகை ஜான்வி கபூர் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தொகுப்பாளர் உங்களது சுயம்வரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த நடிகர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என கேட்டார். அப்போது ஜான்வி கபூர் மூன்று நடிகர்களின் பெயர்களைச் சொன்னார். அதற்கு தொகுப்பாளர் திருமணமானவர்களின் பெயர்களை இதில் கூறக்கூடாது என சொன்னார்.

மேலும் விஜய் தேவரகொண்டாவின் பெயரையும் கூறினார். ஆனால் ஜான்வி கபூர் விஜய் தேவரகொண்டா பிராக்டிக்கலி மேரீட் என்ற வார்த்தையை கூறினார். பின் அவர் பெயரை மறுத்தார். ஜான்வி கபூர் பயன்படுத்திய வார்த்தைகள் விஜய் தேவரகொண்டாவுக்கு கிட்டத்தட்ட திருமணம் ஆகி விட்டதாகவும் ராஷ்மிகாவைத்தான் அவர் திருமணம் செய்ய போகின்றார் என்பதையும் மறைமுகமாக சொல்லும் விதமாக இருக்கின்றது. எந்த  அடிப்படையில் ஜான்வி கபூர் இப்படி ஒரு விஷயத்தை வெளிப்படையாக கூறியிருக்கின்றார் என ரசிகர்கள் யோசித்து வருகின்றார்கள்.

Categories

Tech |