Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சிமெண்ட் மூட்டைகளை வாங்கிக்கிட்டு பணம் தராமல் ஏமாற்றிய வழக்கு”…. மேலும் ஒருவர் கைது…!!!!!

சிமெண்ட் மூட்டைகள் வாங்கிகொண்டு பணம் தராமல் இருந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர்-ஊத்துக்குளி ரோட்டில் கட்டிட மூலப்பொருள் கடை விஸ்வநாதன் என்பவர் வைத்திருக்கின்றார். இவரின் கடைக்கு சென்ற வாரம் பெரியாயிபாளையத்தைச் சேர்ந்த பாபு, வாசு உள்ளிட்ட இருவர் சென்று 30 மூட்டை சிமெண்ட் வாங்கியுள்ளார்கள்.

இதற்கு பணம் தரவில்லை என சொல்லப்படுகின்றது. இது குறித்து விஸ்வநாதன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்தார்கள். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த வாசுவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

Categories

Tech |