Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினியின் ஜெயிலர்” உடன் மோதும் “பொன்னியின் செல்வன் 2”?… அட என்னய்யா சொல்றீங்க…!!!!!

ஜெயிலர் படமும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

பெரிய பட்ஜெட் திரைப்படங்களான வாரிசு, துணிவு, ஜெயிலர், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்களின் ரிலீஸ் தேதி சமூக வலைத்தளத்தில் கசிய ஆரம்பித்துள்ளது. இதில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த இரு திரைப்படங்களும் பெரிய நடிகர்களின் திரைப்படம் என்பதால் தமிழகத்தில் இருக்கும் திரையரங்குகளில் பாதியாக பிரித்துக் கொள்ள வேண்டிய நிலை இருக்கின்றது.

மேலும் வசூல் பாதிக்கலாம் என விநியோகஸ்தர்கள் கவலையடைந்துள்ளார்கள். இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படமும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக செய்தி பரவி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதால் ஒரு திரைப்படத்தை வேறு தேதிக்கு மாற்றி வைக்கலாம் என திரையரங்க அதிபர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

Categories

Tech |