அம்மு அபிராமி நடிக்கும் பெண்டுலம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அம்மு அபிராமி. இவர் தற்போது பெண்டுலம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தொடங்கியது. இத்திரைப்படத்தை சதீஷ்குமரன் இயக்க முக்கிய வேடத்தில் அம்மு அபிராமி, கோமல் சர்மா, ஸ்ரீபதி, ஸ்ரீகுமார், டி.எஸ்.கே, விஜித், ஜூனியர் எம் ஜி ஆர், பிரேம்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள்.
Happy to share #Pendulam first look.
Congrats @VIJJITH1 & team.
@cosmoPvt @suryaindrajit @suriya_indrajit @Bsathishkumaran @pratikpatelbjp_ @simonkking @actorramc @Ammu_Abhirami @JuniorMGRactor @tsk_actor @komalsharmaj @magmyth @premkumaractor @teamaimpr @Viveka_Lyrics pic.twitter.com/DIFxLEN7sr
— VijaySethupathi (@VijaySethuOffl) October 22, 2022
சூர்யா இந்திரஜித் பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கின்றது. இந்த போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இந்த போஸ்டரானது தற்போது வைரலாகி வருகின்றது.