டபிள்யூ டபிள்யூ இ தமிழில் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி கவர்ந்துள்ளது.
நேற்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கு டபிள்யூ டபிள்யூ இ தங்களின் வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்துள்ளது. 90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக குத்துச்சண்டை இருந்தது. இதில் ராக், ஜான் சீனா உள்ளிட்ட வீரர்கள் மிகவும் பிரபலமானவர்கள்.
இந்நிகழ்ச்சியை WWE சேனல் ஒளிபரப்பியது. நேற்று தீபாவளி பண்டிகையொட்டி ரசிகர்களுக்கு வாழ்த்து கூறும் விதமாக தங்களின் இணைய பக்கத்தில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தமிழில் பதிவிட்டிருக்கின்றது. இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.