நடிகை ராதிகா தீபாவளி பண்டிகையை சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராதிகா சரத்குமார். சிம்பு நடிப்பில் வெளியான வெந்த தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து கொலை, லவ் டுடே, சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கின்றார்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் ராதிகா சரத்குமார் தீபாவளி பண்டிகையை நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கின்றார். ராதிகா, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, ரஞ்சனி உள்ளிடோருடன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நேற்று மாலை தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருக்கின்றார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.