Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ALERT : “பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது எப்படி…?” சென்னை பெருநகர காவல்துறை அறிவுரை…!!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது பற்றி சென்னை மாநகர காவல் துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அதில் பின்வருமாறு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ப இரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும். கோர்ட் அனுமதித்த நேரமான காலை 6:00 மணி முதல் 07.00 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் என இரண்டு மணி நேரங்கள் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி 89 படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்கவோ வெடிக்கவோ கூடாது.

பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் இடத்தில் வைக்கப்படாது. வாகனங்கள் அருகில் இருக்கும் இடத்தில் வெடிக்க கூடாது. மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்க கூடாது. பட்டாசுகளை வெடிக்கும் போது தகர டப்பாக்கள் போட்டு மூடி வேடிக்கை பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி எறியப்படும் போது பல விபத்துகள் நேரும். ஆகையால் அதை செய்யக்கூடாது.

குடிசை மற்றும் மாடி கட்டிடங்கள் அருகே ராக்கெட் போன்ற பட்டாசுகளை வெடிக்க கூடாது. எரியும் விளக்குகள் அருகே பட்டாசுகளை வைக்கக்கூடாது. ஈரமாக இருக்கும் பட்டாசுகளை சமையலறையில் வைத்து காய வைக்க கூடாது. குழந்தைகள் பெரியவர்கள் பாதுகாப்பின்றி பட்டாசுகளை வெடிக்க கூடாது. மேலும் அனுமதிக்கவும் கூடாது. பட்டாசு கடைகள் அருகே புகைப்பிடிப்பது புகைத்து முடித்த பின் சிகரெட் துண்டுகளை தூக்கி எறிவதோ செய்யக்கூடாது.

பட்டாசு விற்பனை செய்யும் கடை அருகில் விளம்பரத்திற்காகவோ போட்டிக்காகவோ பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. பட்டாசு வகைகள் சேமித்திருக்கும் வீட்டிலோ அல்லது கடையிலோ ஊதுவத்தி ஏற்றக்கூடாது. பட்டாசுகள் வெடிப்பதற்கு நீளமான ஊதுவத்தி உபயோகித்து வெடிக்கலாம்.

கால்நடைகள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிப்பதால் அது மிரண்டு ஓடும்போது விபத்துக்கள் நேரலாம். ஆகையால் அவ்வாறு வெடிக்கக் கூடாது. தீ விபத்துக்கள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். மேற்கூறிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |