Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை”…. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்…!!!!!

தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது தொடர்ந்து வட திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை புயலாக வலுப்பெரும் என்பதால் வரும் 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |