Categories
சினிமா தமிழ் சினிமா

PS-1 இதை கவனிச்சீங்களா…? பாடலால் வெளிவந்த உண்மை… நடிகர் கூறிய பதில்…!!!!

பொன்னியின் செல்வன் பாடல் குறித்து நடிகர் கருத்து தெரிவித்துள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 450 கோடிக்கு மேல் அதிகமாக வசூலித்து இருப்பதாக லைக்கா நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. இத்திரைப்படத்திலிருந்து சோழா சோழா பாடல் வெளியான நிலையில் அண்மையில் ராட்சச மாமனே என்ற பாடல் வெளியானது. பாடலில் தஞ்சைக்கு குந்தவையை சந்திக்க சேந்தன் அமுதனுடன் வந்திய தேவன் வருவார்.

இப்போது வந்திய தேவன் கம்ஷனாக வேடமணிந்து பாடலுக்கு நடனம் ஆடுவார். குந்தவை வந்திய தேவனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது சேந்தன் அமுதமும் செம்பியன் மாதேவியும் ஒருவரை ஒருவர் வாஞ்சையுடன் பார்த்துக் கொள்வர். இந்த வீடியோ பாடல் வந்தவுடன் தான் கவனித்ததாக ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு நடிகர் அஸ்வின் எல்லோரும் குந்தவையை பார்த்ததால் இதனை யாரும் கவனிக்கவில்லை என பதில் அளித்து இருக்கின்றார்.

Categories

Tech |