முதுமலை எல்லையோர கிராமங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளி கொண்டாடுங்கள் என வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றது. இதன் கரையோரம் மசினகுடி ஊராட்சி இருக்கின்றது. இங்கு வாழும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என வனத்துறை வருடம் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் நாளை மறுநாள் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.
இதனால் புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் அங்கிருக்கும் கிராம மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வனத்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். மேலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் போது அதிகம் சத்தம் வரக் கூடிய பட்டாசு வெடிகள் வெடிக்க கூடாது. இதனால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படும். மேலும் அவை ஊருக்குள் வர வாய்ப்புகள் இருக்கின்றது., இதனால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளியை கொண்டாட வேண்டும் என கூறியதோடு வனத்துறையின் உத்தரவை பின்பற்ற வேண்டும் எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்கள்.