Categories
சினிமா தமிழ் சினிமா

“2-வது முறையாக “SK” படத்தில் கெஸ்ட் ரோலில் பிரபல நடிகர்”….!!!!!

இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் சூரி.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் கெஸ்ட் ரோலில் சூரி Entertainment பொழுதுபோக்கு

 

இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி நேற்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் கிளைமாக்ஸில் சூரி சிறப்பு வேடத்தில் நடித்திருக்கின்றாராம். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே திரைப்படத்திலும் கெஸ்ட் ரோலில் சூரி நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் சூரி காம்பினேஷன் பல திரைப்படங்களில் ரசிகர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸில் நடித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |