Categories
சினிமா தமிழ் சினிமா

“சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு இந்த பாடல்கள் தான் பிடிக்குமாம்”… பரிசு அனுப்பி பாராட்டு….!!!!

சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு மிகவும் பிடித்த பாடல்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என சொல்லப்படுகின்றது. இந்த படத்தில் விஜய் பாடிய முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில் விஜய் வழக்கமாக ஒரு நல்ல பாடலை கேட்கும் போது அந்த கலைஞர்களுக்கு போன் செய்து பாராட்டி விடுவார். அந்த வகையில் சந்தோஷ் நாராயணனையும் பாராட்டி இருக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு மிகவும் பிடித்தது ஜிகர்தண்டா திரைப்பட பாடல்களாம். மேலும் சந்தோஷ நாராயணனுக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் ஒரு பேட்டில் தனது ஆட்டோகிராப் போட்டு பரிசாக கொடுத்திருக்கின்றார்.

Categories

Tech |