ஓமலூர் அருகே இளைஞரிடம் 8 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் சென்ற வருடம் தனது செல்போனுக்கு ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தின் லிங்க் ஒன்றை பதிவிறக்கம் செய்திருக்கின்றார். பின் அவர் தனது வங்கி கணக்கு எண், ஆதார், பான் கார்டு உள்ளிட்ட தகவலை கூறி 62 ஆயிரத்து 990 பெற்றிருக்கின்றார். இந்தப் பணத்தை அவர் திரும்ப செலுத்தி விட்டதாக சொல்லப்படுகின்றது.
ஆனால் அந்த நிறுவனம் அவரிடம் பணம் செலுத்தவில்லை என தொடர்ந்து குறுந்தகவல்கள் அனுப்பி இருக்கின்றது. இதனிடையே அவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து பல்வேறு செல்போன் எண்ணிலிருந்து அனுப்பி மிரட்டியுள்ளது. இதனால் பயந்து போன அவர் மீண்டும் 8 லட்சத்து 14 ஆயிரத்து 860 வரை செலுத்தி இருக்கின்றார். ஆனால் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.