Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பர்னிச்சர் கடையை கண்டித்து மக்கள் சாலை மறியல்”…. பெருந்துறை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு….!!!!!

ஈரோடு பெருந்துறை ரோட்டில் பர்னிச்சர் கடையை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் சென்ற ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈரோடு பெருந்துறை ரோடு பழைய பாளையத்தில் இருக்கும் மார்க் டிரண்ட்ஸ் என்ற பர்னிச்சர் கடைக்கு சென்று சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக 5 லட்சத்துக்கு 30 ஆயிரத்திற்கு வாங்கி இருக்கின்றார். இதை தொடர்ந்து கடை ஊழியர்கள் செந்தில்குமாரின் வீட்டிற்கு பொருட்களை கொண்டு சென்றார்கள். அப்போது சோபாவில் பழுது ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் செந்தில்குமார் கடை நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு புகார் கொடுத்தார்.

மேலும் வேறு ஷோபாவை மாற்றி தரும்படியும் கேட்டார். ஆனால் கடைக்காரர்கள் சர்வீஸ் மட்டும் செய்து தருவதாக கூறினார்கள். இதனால் செந்தில்குமார் தனக்கு தெரிந்தவர்களுடன் கடைக்கு சென்று முறையிட்டார். இது குறித்து கேட்டும் கடைக்காரர்கள் முறையான பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில் குமார் மற்றும் அவர்களுடன் சென்றவர்கள் ஈரோடு பெருந்துறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றது. பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்சார் பேச்சுவார்த்தை நடத்தியதில் கடை உரிமையாளர்கள் சரியான பதில் கூறவில்லை. இதனால் போராட்டக்காரர்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். பின் இருவது நிமிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது.

Categories

Tech |