Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆரோக்கியம் நிறைந்த “மணத்தக்காளி வத்தல் குழம்பு”

தேவையான பொருட்கள்

  • மணத்தக்காளி வத்தல்                  – 100 கிராம்
  • புளி                                                           – சிறிதளவு
  • மஞ்சள் தூள்                                        – 1/4 டீஸ்பூன்
  • தக்காளி                                                  – 2
  • பூண்டு                                                     – 15 பல்
  • கடுகு                                                        – 1/2 டீஸ்பூன்
  • வெந்தயம்                                             – 1/2 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய்                                – தேவைக்கேற்ப
  • உப்பு                                                          – தேவையான அளவு
  • வத்தல் பொடி                                       – 6 டீஸ்பூன்
  • கருவேப்பிலை                                    – சிறிதளவு
  • பல்லாரி                                                   – 2

 

செய்முறை

புளியை தண்ணீரில் போட்டு கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் மணத்தக்காளி வத்தல் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுக்கவும்.

பின்னர் உப்பு வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.

அதனுடன் வத்தல் பொடி மஞ்சள் பொடி சேர்த்து கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

கொதித்து வருகையில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கி விடவும்.

ஆரோக்கியம் நிறைந்த மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார்.

மணத்தக்காளி நன்மைகள்

  • வயிற்றுப்புண்களை அகற்றும்.
  • உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை கொடுக்கும்.
  • காய்ச்சல் ஜுரம் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மணத்தக்காளி தீர்வளிக்கும்.
  • காச நோயை குணப்படுத்த உதவும்.
  • கல்லீரல் பாதிப்பை சரி செய்யும்.
  • மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுவிக்கும்.

Categories

Tech |