Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி’…. தொடங்கி வைத்த மேயர்….!!!!

தூத்துக்குடியில் பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மைய நூலகம் சார்பாக ராஜாராம் மோகன் ராய் 250-வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக நகராட்சி மேயர் பங்கேற்று கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

இந்தப் பேரணியானது முக்கிய சாலைகள் வழியாக சென்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் முடிந்தது. இதைத் தொடர்ந்து பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவிகளுக்கு பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பரிசு வழங்கி பாராட்டினார்.

Categories

Tech |