Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை”… மாணவர்களின் கல்வி பாதிப்பு….. ஆட்சியர் அலுவலகத்தில் மனு…!!!!!

முதலி பாளையம் ஹவுசிங் யூனிட் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாகுறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது என ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கொடுத்தார்கள்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் கொடுத்தார்கள். அந்த வகையில் முதலிபாளையம் ஊராட்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள்.

அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, முதலிபாளையத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி இருக்கின்றது இப்பள்ளியில் 351 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்த நிலையில் இப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே வேலை செய்து வருகின்றார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இரண்டு ஆசிரியர்கள் கொண்டே கல்வி கற்பிக்கப்படுகின்றது. இதனால் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள்.

அவர்களால் முறையாக கல்வி கற்க முடியவில்லை. இதுகுறித்து பலமுறை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் ஆசிரியர்கள் போதுமான அளவிற்கு நியமிக்கப்படவில்லை. இதனால் பள்ளியில் சேர்க்கையும் குறைந்துள்ளது. இருக்கின்ற மாணவர்களின் கல்வியும் பாதிக்காமல் இருக்க பெற்றோர்கள் சேர்ந்து மூன்று ஆசிரியர்களை தற்காலிகமாக நியமித்திருக்கின்றோம். ஆகையால் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்கள்.

Categories

Tech |