குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பயணங்களுக்காக வாங்கப்பட்டுள்ள சொகுசு விமானம் காங்கிரஸ் ஆட்சியில் தான் ஆர்டர் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பயணங்களுக்காக 8,400 கோடி ரூபாய் செலவில் 2 சொகுசு விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அதில் 1 கடந்த வாரம் இந்தியா வந்தடைந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சொகுசு விமானம் வாங்கி பிரதமர் திரு மோடி பல ஆயிரம் கோடி ரூபாயை வீண் அடித்து விட்டதாக திரு ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் மிக மிக முக்கிய நபர்கள் பயணம் செய்வதற்கான இந்த சொகுசு விமானங்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது. இதற்காக 2012ஆம் ஆண்டில் அப்போதிருந்த அமைச்சரவைக்குழு 10 முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவு எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.