Categories
உலக செய்திகள்

என்னை சுட்டு கொன்றிருக்கலாம்…. கற்பழிக்கப்பட்ட மூதாட்டி கதறல்… உக்ரைனில் கொடூரத்தின் உச்சம்…!!!

ரஷ்ய படையினரால் வன்கொடுமை செய்யப்பட்ட 83 வயது மூதாட்டி இதற்கு தன்னை கொன்றிருக்கலாம் என்று கதறியிருக்கிறார்.

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படை போர் தொடுக்க தொடங்கியது முதல் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். மேலும் அதிகமாக வன்கொடுமை சம்பவங்களும் நடக்கின்றன. ரஷ்ய படை, தங்கள் கண்ணில் படக்கூடிய உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுமிகள், பெண்கள் அனைவரையும் பாலியல் வன்கொடுமை செய்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறிதும் மனிதாபிமானமின்றி இரக்கமில்லாமல் 83 வயது மூதாட்டியை ரஷ்ய வீரர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மூதாட்டி தன்னை இப்படி செய்ததற்கு பதில் கொன்றிருக்கலாம் என்று வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த மூதாட்டி தெரிவித்திருப்பதாவது, ரஷ்யாவை சேர்ந்த ஒரு வீரர் தன் கழுத்தின் பின் பக்கமாக பிடித்த போது மூச்சுத் திணறல் உண்டாகி சுவாசிக்க முடியாமல் திணறியதாக தெரிவித்திருக்கிறார்.

அவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை ஆவார். மேலும் அவர் அந்த ரஷ்ய வீரரிடம் எனக்கு ஏற்பட்ட இதே நிலை உங்கள் தாய்க்கு ஏற்படுவதற்கு அனுமதிப்பீர்களா? என்று கேட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த சமயத்தில் தன் ஊனமுற்ற கணவரும் வீட்டில் இருந்ததாக கூறி அழுதிருக்கிறார். தற்போது நான் உயிரோடு இல்லை, சாகவும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |