Categories
மாநில செய்திகள்

82 வயதில் 24 பட்டப்படிப்புகள்…. 25-வது பட்டபடிப்புக்கு விண்ணப்பித்த முதியவர்…. குவியும் பாராட்டு….!!!

தனது 82வது வயதில் 24 பட்டப்படிப்புகளை முடித்து முதியவர் 25-ஆவது பட்டப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளார்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 82 வயதில் இருபத்தி ஐந்தாவது பட்டப்படிப்புக்கு ஒரு முதியவர் விண்ணப்பித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கதிராமங்கலத்தில் உள்ள குருமூர்த்தி என்பவருக்கு 82 வயதாகிறது. இவருக்கு சிறு வயது முதலே படிப்பில் அதிக ஆர்வம் இருப்பதால் இன்று வரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் தனது பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக பனிரெண்டு பட்டயப்படிப்பு களையும், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் 12 பட்டப்படிப்பு முடித்துள்ளார். இதுவரை 24 பட்டங்களை பெற்ற இவர் தற்போது 25வது பட்டப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளார் .கல்விக்கு வயது எப்போதும் தடையில்லை என்பது இவர் மூலம் உண்மையாகியுள்ளது.

Categories

Tech |