ஜெர்மனியை சேர்ந்த 81 வயது பாட்டி உடற்பயிற்சி செய்து தனது டிக் டாக் பக்கத்தில் வெளியிடும் வீடியோ பயங்கர வைரலாக பரவி வருகிறது.
ஜெர்மனியில் வசிக்கும் 81 வயதான ரிஷ்கோ என்ற பாட்டி பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை செய்து தனது டிக் டாக் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இது பலரது பார்வையை ஈர்த்துள்ளது. அது மட்டுமின்றி ரிஷ்கோ இந்த வயதிலும் இப்படி உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் என்று எண்ணி அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இவரின் இந்த முயற்சி பல இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இவர் உடற்பயிற்சி செய்வதோடு மட்டும் நிறுத்தாமல் தனது கணவரோடு சேர்ந்து அவ்வபோது சில டான்ஸ் களையும் ஆடி பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் பயங்கர வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து ரிஷ்கோ கூறியதாவது, “நான் மற்றவர்கள் ஆரோக்கியமாக இருக்க ஊக்குவிக்கவே இதுபோன்ற வீடியோக்களை பதிவிடுகிறேன். உடலை சோம்பேறியாக வைத்துக் கொள்ளாதீர்கள். ஒரே இடத்தில் உட்காராமல் நகர்ந்து ஏதாவது வேலை செய்யுங்கள். நான் இப்பொழுதுதான் மகிழ்ச்சியாக உள்ளேன். ஆனால் முன்பு இதுபோல் நான் தன்னம்பிக்கையுடன் இருந்ததில்லை” என்று மகிழ்ச்சியாக தெரிவித்தார்.