Categories
சினிமா தமிழ் சினிமா

மும்பையில் நடைபெற்ற 80’ஸ் ரீயூனியன் நிகழ்ச்சி… ஜொலிக்கும் நடிகர்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

1980 காலகட்டத்தில் திரையுலகில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் வருடந்தோறும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு இந்த நிகழ்ச்சி முதல் முறையாக மும்பையில் நடைபெற்று உள்ளது. 80ஸ் ரீயூனியன் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியின் பத்தாவது ஆண்டு கொண்டாட்டத்தை கடந்த 2019 ஆம் வருடத்தில் நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய ஹைதராபாத் இல்லத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார்.

80ஸ் ரீயூனியன்

அந்த நிகழ்ச்சி அனைவர் மனதிலும் நீங்காத நினைவாக இடம் பெற்றது. கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்நிலையில், மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், பாக்யராஜ், சரத்குமார், ராஜ்குமார், அர்ஜூன் ,சிரஞ்சீவி, அணில் கபூர், நரேஷ், சஞ்சய் தத், வெங்கடேஷ், ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா, அம்பிகா, ராதா, ஷோபனா, ரேவதி, நதியா, குஷ்பூ, சுகாசினி, வித்யா பாலன், மீனாட்சி சேஷாத்திரி போன்ற திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |