Categories
Uncategorized உலக செய்திகள்

8000 பள்ளி மாணவிகளிடமிருந்து வந்த பாலியல் வன்முறை புகார்கள் ..பிரிட்டனில் வெளியான பகீர் தகவல் ..!!

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பாலியல் வன்முறை தொடர்பான செயல்களில் மூழ்கிக்கிடப்பதாக புகார்கள் வந்துள்ளது .

ஆசிய அமெரிக்கரான 22 வயதான சோமா சாரா என்பவர் பாதி சீனர் என்பதால் பிரிட்டனில் படித்து வரும் போது பல பிரச்சினைகளை சந்தித்து உள்ளார். பலரும் அவரிடம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ‘என்னுடன் வருகிறாயா’என்றெல்லாம்  ஆபாசமாக பேசியதாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின்  போது சக தோழிகள் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த க்கஷ்டங்களை பற்றி சாராவிடம் கூறியுள்ளனர்.அதனால் சாரா everyone’s invited என்ற இனையதளத்தை ஆரம்பித்து  அதில்  பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள  கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதில் ஒரே வாரத்தில் 300 பேர்  தாங்கள் பாதிக்கப்பட்டதாக அவர்களின் கதைகளை தளத்தில் பதிவேற்றம் செய்தார்கள். அதில் மாணவிகள் மட்டுமல்ல மாணவர்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக  கூறியுள்ளனர்.மேலும்  பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் இளவரசர் வில்லியம் படித்த பள்ளிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவ மாணவிகள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் குற்றம் தொடர்பாக இன்று வரை 8000 மாணவ மாணவிகளிடமிருந்து புகார் வந்துள்ளதாக பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேடொவ் வாக்கர்  என்பவரும் இந்த புரட்சிகர திட்டத்தில் இணைந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் பாலியல் குற்றம் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தங்களிடம் வந்து புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |