Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

800 கோழிகளை கொன்ற மர்ம விலங்கு…. வனத்துறையினர் தீவிர விசாரணை….!!

சுசீந்திரம் அருகே மர்ம விலங்கு கடித்தில் 800 கோழிகள் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி  மாவட்டதில் இருக்கும்   சுசீந்திரம் பகுதியை  சேர்ந்தவர் சதீஷ்.  வீட்டின் அருகில் கோழி பண்ணை வைத்திருக்கும் இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1 500 கோழிகளை வளர்த்து வருகின்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பண்ணைக்கு சென்று கோழிகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் வைத்து விட்டு வந்துள்ளார்.

பண்ணைக்கு நேற்று காலை பண்ணை க்கு சதீஷ் சென்றுள்ளார். அப்போது  கோழிகள் ஆங்காங்கே  இறந்து கிடந்ததை  பார்த்து அதிர்ச்சி அடைந்தரர். பண்ணை முழுவதும் 800  கோழிகள்  இறந்தது  கிடந்தது தெரியவந்தது. கோழிகளை ஏதோ கடித்தது போன்ற காயம் இருந்தது. ஆகவே மர்ம விலங்கு கடித்து கோழிகள் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதுகுறித்து சதீஸ்  சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்து இருக்கிறார்.

இதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்தது மட்டுமின்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளரர். வனத் துறையினர் விரைந்து வந்து ஆய்வு செய்து  காட்டு பூனை அல்லது  செந்நாய் போன்றவை கடித்து இருக்கலாம் எனக் கருதியுள்ளனர். ஆனால் எது கடித்தது என்று உறுதியாக தெரியததால்  வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |