Categories
லைப் ஸ்டைல்

80 வயசு ஆனாலும் உங்க கண் பார்வை மங்காமல் இருக்கணுமா?…. அப்போ தினமும் இத ஃபாலோ பண்ணுங்க….!!!!

தற்போதைய காலகட்டத்தில் 10 வயதை கடந்த உடனே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்ணாடி போட தொடங்கி விடுகின்றனர். அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் சாகும் வரையில் கண்ணாடி என்பதை உபயோகப்படுத்தியது இல்லை. அதற்கு காரணம் அவர்கள் ஆரோக்கியம் மிக்க உணவுகளை சாப்பிடுவது தான். அதன்படி கண்களை நாம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதனை மட்டும் தொடர்ந்து பின்பற்றி வந்தால் போதும். அவ்வாறு தினமும் இரவில் படுக்கும் முன்பு இரண்டு துளிகள் விளக்கெண்ணெய் கண்களைச் சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து வர, கண்கள் பிரகாசமாகவும் பளிச்சென்றும் இருக்கும்.

கண்கள் நன்கு பளிச்சென்று தெரிவதற்கு வாரத்திற்கு ஒரு முறை இரண்டு துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணையை கண்களில் விட வேண்டும். சிறிது பாதாம் பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி வர கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் நீங்கும். தினமும் கண் பயிற்சிகளை செய்வதன் மூலம் கண்பார்வை மேம்படும். தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மீது வைத்து 10 நிமிடம் அமர, கண்களில் உள்ள சோர்வு மற்றும் கருவளையங்கள் நீங்கும். உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி கண்களின் மீது வைத்தாலும் கருவளையங்கள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்ட ஒரு சிலருக்கு கண்ணாடி இல்லாமல் எதுவும் படிக்க முடியாது. இதனை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து, தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை எழுத்து மாறும். கண்ணில் உண்டாகும் வெண்படலமும் மறைந்து கண்பார்வை சரியாகும்.

Categories

Tech |