ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் போட்டியில் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகை மற்றும் திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.. ஏர் இந்தியாவை நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த நிறுவனத்தை தொடங்கியது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி டாடா குழுமம் தான்..
இதனையடுத்து 1953 ஆம் ஆண்டு இந்தியாவின் வசம், அதாவது மத்திய அரசு இந்த நிறுவனத்தை கையகப்படுத்திய நிலையில், சமீப காலமாக கடுமையான நிதி நெருக்கடியிலும் கடன் பிரச்சினைகளும் இந்த நிறுவனம் தத்தளித்து வந்தது. நிறைய தனியார் நிறுவனங்கள் வெளி நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் எல்லாம் இதனை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது.
நிதி நெருக்கடி சூழலில் மூழ்கும் நிலையில் தனியாருக்கு விற்பதற்காக ஏற்பாடுகளை தனியார் மயமாக்குவதற்காக மத்திய அரசு முன்னெடுத்த நிலையில், டாடா ஆரம்பத்திலிருந்து முன்னணியில் இருந்தார்கள்.. இந்த நிறுவனத்தை ஏலங்கள் மூலமாக எடுக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய கவுன்சில் அமைச்சர்கள் குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகை மற்றும் திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாட்டா சன்ஸ் குழுமம் ஏர் இந்தியாவை கைப்பற்றுகிறது. டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953 ஆம் ஆண்டு நாட்டுடமை ஆக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர்களிடமே செல்கிறது.