Categories
மாநில செய்திகள்

“80% அரசு பள்ளி மாணவர்கள் தோல்வி” நீட் தேர்வுக்கான தரமான இலவச பயிற்சி மையம்….. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகத்தில் அரசு நீட் தேர்வுக்கான தரமான இலவச பயிற்சி வழங்க வேண்டும் என சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, நீட் தேர்வில் அரசு பள்ளியை சேர்ந்த 80 சதவீதம் மாணவர்கள் தோல்வி அடைந்தது மிகவும் வேதனையான ஒரு விஷயம். இந்த பிரச்சனையில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி மையத்தை தொடங்க வேண்டும்.

ஒருவேளை தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றாலும் இலவச நீட் தேர்வு மையங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். மாணவர்கள் தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி மையங்களை வட்டாரம் தோறும் அமைக்க வேண்டும். மாணவர்கள் தேர்ச்சி பெறாததற்கு முக்கிய காரணம் அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களை ஏற்படுத்தாதது தான். ஒன்றிய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக கூறியிருக்கிறது.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். மாநில அரசுகளின் கல்வி உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 48 மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதனால் பயிற்சி மாணவர்கள் மிகுந்த மன வேதனையில் இருப்பதோடு சிலர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு முடிவெடுத்து விடுகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன் என்றார்.

Categories

Tech |