பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி என்ற பகுதியில் நடந்த பொருட்காட்சியில் ராட்டினம் ஒன்று 80 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பஞ்சாபின் மொஹாலியில் பொருட்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. அதேபோல பல பொழுதுபோக்கு விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி அங்கு அமைக்கப்பட்டு இருந்த ராட்டினத்தில் பலரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ராட்டினம் ஒன்று 80 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Terrifying incident at a fair in #Mohali. Several injured. More inputs awaited. @puneetpareenja reports pic.twitter.com/6irNspSr8D
— Laasiya Priya | లాస్య (@laasiyapriya) September 4, 2022