ஜெர்மனியில் ஒரு கட்சியால் நடத்தப்பட்ட பார்ட்டியில் 8 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் சமீப நாட்களாக இரவு நேரங்களில் பார்ட்டி செல்லும் பெண்களுக்கு எதிராக பல குற்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பெண்களுக்கு பானங்களில் போதை பொருளை கலந்து கொடுத்து வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
மேலும் ஊசி மூலமாகவும் உடலில் போதை பொருள் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த பெண்கள் சுயநினைவை இழக்கும் போது கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வது, அவர்களின் பொருட்களை திருடி செய்வது போன்ற குற்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
அதன்படி ஜெர்மன் நாட்டில் இருக்கும் social democratic party (spd) எனும் கட்சி ஒரு பார்ட்டி நடத்தி இருக்கிறது. அதில், நாட்டின் சேன்ஸலாராக இருக்கும் ஓலாஃப் ஷோல்ஸ்-ம் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அதே பார்ட்டியில் எட்டு பெண்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஒரு கட்சி நடத்திய பார்ட்டியில் இவ்வாறான பயங்கர செயல் அரங்கேறியுள்ளது. எனவே, உரிய கட்சியானது இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள தொடங்கியிருக்கிறது.