8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிராமத்தில் கூலி வேலை பார்த்து வரும் குடும்பத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 48 வயது ஜெயராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதான கூலித் தொழிலாளி அப்பகுதியில் கூலி வேலை செய்துவரும் மற்றொரு குடும்பத்துடன் நட்பாக பழகி வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்ட ஜெயராமன் என்பவர் கூலி தொழிலாளியின் மகளான நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமியை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தொடர்ந்து வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் இதுகுறித்து கேட்டுள்ளனர். அதை தொடர்ந்து அந்த சிறுமி அவர் பாலியல் வன்கொடுமை செய்த தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஜெயராமனை போஸ்கோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 8 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.