Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

23 வயதில் 8 மனைவிகள்…… 8 மனைவி புகார்……. காதல் மன்னன் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தஞ்சாவூரில் 23 வயதான  இளைஞர் ஒருவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் வெறும் 23 வயதான இவர் இதுவரை எட்டு பெண்களை காதலித்து திருமணமும் செய்துள்ளார். இதுவரை திருமணம் செய்த 8 பெண்களுடனும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மாறி மாறி வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் கடைசியாக திருமணம் செய்த எட்டாவது பெண் அவரை நீண்ட நாட்களாக காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் சந்தோசை தேடிய காவல்துறையினர் அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் இதுவரை எட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தோஷ் திருமணம் செய்த எட்டு பெண்களும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |