8 வழி சாலைக்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம் என்று முதல்வர் தெரிவித்ததற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சேலம் முதல் 8 வழிச்சாலை திட்டத்திற்கு அரசாங்கம் பொதுமக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தியது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இதற்க்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை அரசு கைது செய்து , போராட்டத்தை ஒடுக்கியது. மேலும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் , இன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் ,நவீன முறைப்படி அதிவிரைவுச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர் , சிலர் எதிர்க்கின்றனர். 8 வழி சாலைக்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம். யாருக்கும் நெருக்கடி தந்து நிலத்தை கைப்பற்றமாட்டோம்.