Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“8 மணி நேரம்” கண்களை கட்டிக்கொண்டு சாகசம்….விருது பெற்ற கோவை இளைஞர்…!!

நபர் ஒருவர் 8 மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு அபாயகரமான சாதனைகளை செய்து விருதை பெற்றுள்ளார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் மேஜிக் கலை நிபுணரான டிஜே வர்கீஸ். இவர் கடந்த 25 வருடங்களாக மேஜிக் செய்து வருகிறார். மேஜிக் கலையில் தனெக்கென்று ஒரு அடையாளத்தை வைத்து இருக்கிறார். இவர் தன்னுடைய கண்களை துணியால் கட்டிக் கொண்டு அபாயகரமான சாகசங்கள் செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு, யுனிவர்சல் புக் ஆஃ ரெக்கார்டு என்ற பல்வேறு உலக சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக நடைபெற்ற விழாவில் IERCT என்னும் விருதை பெற்றுள்ளார். இதற்கான விருதை வாங்கி வந்த இவருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இவர் பேசுகையில், “மேஜிக்குகளில் பல்வேறு சாதனைகள் செய்து 50க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியிருக்கிறேன். இதுவரை உலக அளவில் ஒரு மணி நேரம், நான்கரை மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு மேஜிக் செய்து சாதனை செய்திருக்கிறேன். அனால் தற்போது எட்டு மணி நேரம் தொடர்ந்து கண்களை மூடிக்கொண்டு மேஜிக் செய்து சாதனை செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இவர் மேஜிக் மட்டுமின்றி படம்வரைவது, தன் எதிரில் உள்ளவர்களின் மனதில் உள்ளதை தெரிந்துகொள்வது போன்ற வித்தைகளை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |