குழந்தைகளை தூக்கி சென்ற சம்பவத்திற்கு பிறகு வனத்துறையினர் கூண்டு வைத்து 25 குரங்குகளை பிடித்துள்ளனர்.
தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிக்கும் ராஜன்-புவனேஸ்வரி என்பவரின் இரட்டை குழந்தை பிறந்து 8 நாளே ஆன நிலையில் குரங்கு ஒன்று வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று அந்த குழந்தையை தூக்கி சென்றது. இதில் ஒரு குழந்தை மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு குழந்தை குளத்தில் விழுந்து பலியானது. குரங்குகளின் அட்டகாசம் காரணமாக இச்சம்பவம் நடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குரங்குகளை பிடிக்க 8 இடங்களில் குண்டு வைத்து, வாழைப்பழம் போன்ற உணவுகளை வைத்து நேற்று இரவு 25 மெகாக் மற்றும் அல்ஃபா குரங்கு, குரங்குகளின் தலைவன் உள்ளிட்ட குரங்குகளை பிடித்தனர். மேலும் அப்பகுதியில் சுற்றித் திரியும் மற்றங்களை குரங்குகளை பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
குரங்குகள் தொல்லைகள் மற்ற பகுதியில் இருந்தால் அப்பகுதி மக்களும் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்று அங்கு வந்த வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா நேரில் பார்வையிட்டு பிடிபட்ட குரங்குகளை திருச்சி துறையூர் அருகே உள்ள பச்சைமலை பகுதியில் விடுமாறு உத்தரவிட்டுள்ளார்.