நேபாளத்தில் யுரேனியம் போன்ற பொருளை இந்தியர்கள் இரண்டு பேர் உட்பட எட்டு நபர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்ததால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட யுரேனியம் போன்ற பொருளை சிலர் சட்டவிரோதமாக விற்க முயற்சிப்பதாக காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, காத்மாண்டுவில் இருக்கும் பௌதா என்ற புறநகர்ப்பகுதியின் ஒரு நட்சத்திர ஓட்டலில் நின்ற வாகனத்திலிருந்து, யுரேனியம் போன்ற பொருட்களை காவல்துறையினர் மீட்டனர். மேலும், நவராஜ், பூபேந்திரா ஆகிய இரண்டு நபர்களை கைது செய்திருக்கிறார்கள்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பொருட்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது என்றும் ஒரு கிலோ ரூ 35 கோடி ரூபாய்க்கு விற்க இருந்ததும் தெரியவந்தது. அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், மேலும் 6 நபர்கள் கைதாகியுள்ளனர்.