ரஷ்ய நாடுடன் கிரீமியா தீபகற்ப பகுதியை சேர்க்கும் பாலத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சந்தேகத்தின் அடிப்படையில் 8 நபர்கள் கைதாகியுள்ளனர்.
ரஷ்ய நாட்டுடன் கிரீமியா தீபகற்ப பகுதி சேர்க்கப்பட்ட பிறகு, அந்நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின் புதிதாக ஒரு பாலத்தை அமைத்தார். கடந்த 2018 ஆம் வருடத்தில் அவர் அந்த பாலத்தை திறந்து வைத்த நிலையில், 2020 ஆம் வருடத்தில் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது.
இதற்கிடையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரின் ஒரு பகுதியாக உக்ரைன் படையினர் இந்த முக்கிய பாலத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் பாலம் கடும் சேதமடைந்தது.
மேலும், ரயில்வே தண்டவாளத்தில் சென்ற சரக்கு ரயிலில் தீப்பொறி பட்டதில், ஏழு பெட்டிகள் எரிந்தன. இந்நிலையில் இந்த பாலத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் சந்தேகத்தின் அடிப்படையில் ரஷ்யா 8 நபர்களை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.