நாட்டில் மக்கள் தேவை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு கட்டாயம் எட்டு வழி சாலை அவசியம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக நடைபெற்ற வழக்கில் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதில் தற்போது உச்சநீதிமன்றம் சென்னை மற்றும் சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் எட்டு வழிசாலை குறித்து தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “நாட்டில் விபத்து, கால விரயம், எரிபொருள் சேமிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் மிகவும் அவசியம். எட்டு வழி சாலை மத்திய அரசின் திட்டம். நிலம் கையகப்படுத்தியது மட்டுமே மாநில அரசு. எட்டு வழிசாலை என்பது நீண்ட காலத் திட்டம். இப்போது தொடங்கினால் கூட முடிய ஆறு ஆண்டுகள் ஆகும். மேலும் வெளிநாடுகளில் குறைந்தபட்சமே எட்டு வழி சாலை உள்ளது. நாடு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு சாலை அவசியம்”என்று அவர் கூறியுள்ளார்.