Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

8 வருடமாக விக்கி காவலுக்கு இருந்தான்…. இப்போ பரிதாபமா போயிட்டான்…. தெரு நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர்….!!

தெரு நாய் உயிரிழந்ததற்கு பேனர் அடித்து அஞ்சலி செலுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அருகே பட்டணம் ரோடு பகுதியில் 8 வருடங்களாக தெரு நாய் ஒன்று காவலாக சுற்றி வந்துள்ளது. விக்கி என்று யார் அழைத்தாலும் அடுத்த நிமிடம் அவர்களிடம் சென்று நன்றியுடன் வாழட்டும் அந்த தெரு நாய்க்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்கள் விக்கியை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது விக்கிக்கு பேனர் வைத்து அவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Categories

Tech |