Categories
அரசியல்

8 மாவட்ட பாஜக கலைப்பு…. காரணம் என்ன?…. அண்ணாமலை அதிரடி உத்தரவு…..!!!!!

பாஜக கட்சி ரீதியிலான 8 மாவட்ட தலைவர்களை நீக்கி அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இருபதாவது, கட்சிமாவட்டங்களில் கீழ்கண்ட மாவட்டங்களை சீரமைக்கும் வகையில் திருநெல்வேலி, நாகை, சென்னை மேற்கு, வடசென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு ஆகிய மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது. இதையடுத்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக கீழ்கண்ட நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிகப்படுகிறார்கள்.

புதிய மாவட்ட பொறுப்பாளர்கள்
திருநெல்வேலி -ஜோதி
நாகை -வரதராஜன்
சென்னை மேற்கு -மனோகரன்
வட சென்னை மேற்கு -பாலாஜி
கோயம்புத்தூர் நகர் -முருகானந்தம்
புதுக்கோட்டை -செல்வ அழகப்பன்
ஈரோடு வடக்கு -செந்தில்குமார்
திருவண்ணாமலை வடக்கு -ஏழுமலை
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் கட்சி ரீதியிலான 8 மாவட்ட தலைவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கியுள்ள நிகழ்வு அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |