கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருக்கிறார். சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து இருக்கிறார்கள்.
இதேபோல அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது கடலூர் மாவட்டத்தில் வடலூர் ,சிதம்பரம், மற்றும் கடலூர் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.