Categories
உலக செய்திகள்

8 மாத குழந்தை உட்பட…. கடத்தப்பட்ட இந்தியர்கள் பிணமாக மீட்பு…. பெரும் சோகம்..!!!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36), அவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27) இவர்களது 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமந்தீப் சிங் (39) ஆகியோர் கடத்தப்பட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. துப்பாக்கி முனையில் மர்ம நபர் ஒருவர் இவர்களை கடத்திச் சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் கலிபோர்னியாவில் இறந்த நிலையில் கிடந்ததாக சிஎன்என் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஆர்ச்சர்ட் அருகே அவர்கள் இறந்து கிடந்தனர். குழந்தை உட்பட இந்த நால்வரும் ஒரு தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 48 வயதான ஜீசஸ் மானுவல் சல்காடோ போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். காவலில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்ற அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |