தனது 8 மாத குழந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் wembley பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு போலீசார் அழைக்கப்பட்டனர். அங்கு ஒரு 8 மாத குழந்தை கழுத்தறுபட்டு கிடந்துள்ளது. அந்த இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர் அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். உயிரிழந்தவர் மற்றும் கொலை செய்தவர் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள் என்று மட்டும் கூறிய போலீசார் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என்று கூறிவிட்டனர். ஆனால் விசாரணைக்கு வந்த பெண் போலீஸார் ஒருவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 45 வயதான இல்லோனா என்ற பெண் காபி தயாரித்துக் கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண் போலீசாரிடம் சில தகவல்களை கூறியுள்ளார்.
அப்போது, அந்த வீட்டில் வசித்து வரும் ஒரு பெண் தனது 8 மாத குழந்தையை கழுத்தை அறுத்து கொன்று விட்டு தன் கணவனை அழைத்து, “உன் குழந்தையை கொன்று விட்டேன்” என்று கூறியதாக தெரிவித்தார். அதன் பின் கருப்பு உடை அணிந்திருந்த ஒரு பெண்ணை போலீஸார் கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றதாகவும் அந்த பெண் போலீசாரை பார்த்து கத்திக் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார். சற்று தொலைவில் ஒரு ஆண் ஹிஸ்டீரியா வந்தவர் போல் கத்திக்கொண்டு இருந்ததையும் அவரை போலீசார் காரில் ஏற்றியதோடு மட்டுமில்லாமல் அந்த பெண்ணையும் காரில் ஏற்றிச் சென்றதாக அவர் தெரிவித்தார். தற்போது தடயவியல் நிபுணர்கள் அந்த வீட்டில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.