Categories
Uncategorized

8 ஆவது ஊதிய கமிஷன்… அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… சம்பளத்தில் ஏற்படும் மாற்றம்…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள் நாடு முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு பொருந்துகிறது. ஊழியர்கள் அதன் பலன்களை பெற்று வருகின்றனர் இருப்பினும் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக மகஜர் தயாரித்து வருவதாகவும் அது விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஊழியர் சங்கங்கள் கூறுகின்றது. மேலும் இந்த குறிப்பானையில் உள்ள பரிந்துரைகளின் படி சம்பளத்தை உயர்த்த வேண்டும் அல்லது எட்டாவது ஊதிய குழுவை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும்.

மற்றொருபுறம் எட்டாவது ஊதியக்குழுவை அமலாக்குவது பற்றி எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனினும் ஊழியர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள். தற்போது குறைந்தபட்ச ஊதிய வரம்பு 18 ஆயிரமாக நிலை நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதில் பிட்மென்ட் பாக்டருக்கு இன்கிரி மெண்டல் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது‌. ஏழாவது ஊதிய குழுவில் 3.68 மடங்கு வரை வைத்திருக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் தற்போது இந்த காரணி 2.57 மடங்கு இருக்கிறது பிட்மென்ட் பாக்டர் 3.68 ஆனால் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரத்திலிருந்து 26 ஆயிரம் ஆக அதிகரிக்கிறது.

ஊதிய உயர்வு 27.6 சதவீதம்.

குறைந்தபட்ச ஊதிய அளவு 750.

ஐந்தாவது ஊதிய கமிஷன்.

ஊதிய உயர்வு 31 சதவீதம்.

குறைந்தபட்ச ஊதியளவு 2550.

ஆறாவது ஊதிய கமிஷன்.

பிட்மென்ட் பாக்டர்:1.86

ஊதிய உயர்வு 54 சதவீதம்.

குறைந்தபட்ச ஊதிய அளவு 7000.

ஏழாவது ஊதியகமிஷன்.

பிட்மென்ட் பாக்டர் 2.57மடங்கு.

ஊதிய உயர்வு 14.29 சதவீதம்.

குறைந்தபட்ச ஊதிய அளவு 18000.

எட்டாவது ஊதிய கமிஷன்.

பிட்மெண்ட் ஃபேக்டர்:3.68 மடங்கு காண சாத்திய கூறுகள் இருக்கிறது.

ஊதிய உயர்வு 44 சதவிகிதம்.

குறைந்தபட்ச ஊதிய அளவு 26,000

ஏழாவது ஊதிய குழுவிற்கு பின் எட்டாவது ஊதிய குழு இருக்காது என ஊடக அறிக்கைகள் கூறுகின்றது. அதற்கு மாறாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை தானாக உயர்த்தும் ஒருமுறையை அரசு அமல்படுத்தப் போகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இது தானியங்கு ஊதிய திருத்த முறையாக இருக்கலாம் இதில் பிஏ 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால் சம்பளத்தில் தானாக திருத்தம் செய்யப்படும். இது நடந்தால் 68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதன் நேரடி பலனை பெறுகின்றார்கள் ஆனால் இது பற்றி அரசு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. மேலும் இது பற்றி அரசு முடிவு எடுக்கும் போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு நடுத்தர ஊழியர்களின் சம்பளம் கீழ் மட்டத்திலிருந்து அதிகரிக்க வேண்டும் என்பது நிதி அமைச்சகத்தின் கருத்தாக இருக்கிறது என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இது போன்ற சூழலில் 2023 ஆம் வருடம் புதிய சம்பள ஃபார்முலாவை அரசு கொண்டு வந்தால் நடுத்தர ஊழியர்களுக்கு அதிக பலன் கிடைக்காமல் போகலாம். ஆனால் குறைந்த வருமானம் உள்ள ஊழியர்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது அவர்களது அடிப்படை சம்பளம் 3000 முதல் 21,000 வரை அதிகரிக்க கூடும் மத்திய ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் பேசும்போது சம்பள உயர்வு கோரிக்கைகள் பற்றி விரைவில் குறிப்பை தயாரித்து அரசிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்தால் தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் இந்த இயக்கத்தில்  இந்த ஊழியர்களுடன் ஓய்வூதியம் பெற்ற ஊழியர்களும் பங்கேற்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |