Categories
கல்வி மாநில செய்திகள்

8 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு… NMMS தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு…!!!

8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி உதவித்தொகை பெற NMMS   தேர்வுகளுக்கான  முக்கிய குறிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வருடம் முக்கியமான பொதுத் தேர்வுகள் நடக்கும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர்களும் பொது தேர்வை எதிர் பார்த்து  ஆயத்தமாக இருக்கின்றனர். இந்நிலையில் பொதுத் தேர்வுக்கான தேதிகளில் சமூகத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS  நாளை நடக்க உள்ளது. இதன் ஹால் டிக்கெட் பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியாகிறது.

ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த தேர்வுகளில் பங்கு பெற்று உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தேர்விற்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் நாளை நடக்க இருக்கும் தேர்வு காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள்  இரு பிரிவுகளாக நடக்க உள்ளன. இதன் ஒரு பகுதி 9:30 முதல் 16 மணி வரையும் அதன்பின்னர் 11.30 முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

அதில் கட்டாயமான முறையில் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும். SAT  கணக்கு பாடத்தில் விடையளிக்க வினாத்தாளில் உள்ள எல்லா வினாக்களுக்கும் அருகிலேயே குறிப்புகளை எழுதி பார்த்துக் கொள்ளலாம். என் தொடர் வரிசை, எண் எழுத்து குறியீடுகள், சிறப்பு  படங்கள், இருக்கை அமைப்புகள் ,ஒப்புமை எண்கள், எழுத்துகள் படங்கள், தவறான வார்த்தை, ஆங்கில அகர வரிசைப்படி வரிசைப்படுத்துதல், தலைப்புகள் இடம்பெறவுள்ளது. இத்தேர்வில் பங்கு பெறும் மாணவர்கள் அதை பார்த்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |