Categories
மாநில செய்திகள்

8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 மாணவர்கள்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முடிவே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி-திருநாவலூர் அருகே உள்ள கிராமத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு இந்த விஷயத்தை தனது நண்பர்களுடன் மாணவர் பகிர்ந்துள்ளார். அதன்பிறகு மாணவனின் இரண்டு நண்பர்கள் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் இரண்டு மாணவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு மாணவர் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |