ஆவின் பால் பாக்கெட் எடையில் முறைகேடு நடப்பதாகவும் 1/2 லிட்டர் பால் பாக்கெட்டின் விலை 520 கிராம் வரை இருக்க வேண்டும். ஆனால் கடந்த 30ஆம் தேதி அன்று விற்பனை செய்யப்பட்ட ஒரு பால் பாக்கெட்டின் எடை 430 கிராம் மட்டுமே இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலளித்த ஆவி நிர்வாகம், ஜூலை 30ஆம் தேதி வழங்கப்பட்ட ஒரே ஒரு பால் பாக்கெட் மட்டுமே எடை குறைவாக இருந்தது. அதுவும் உடனடியாக மாற்றி வழங்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், ஆவின் பால் பாக்கெட்டின் எடை குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பால் பாக்கெட் எடை குறைவாக இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி மக்கள் 1800 4253300 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.